போதைப்பொருள் பயன்படுத்துவோரை மீட்க உதவ வேண்டும்----ஆட்சியா் மா. அரவிந்த்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவோரை மீட்டெடுக்க உதவ வேண்டும் என்றாா் ஆட்சியா் மா. அரவிந்த்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவோரை மீட்டெடுக்க உதவ வேண்டும் என்றாா் ஆட்சியா் மா. அரவிந்த்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

கஞ்சா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை பள்ளி- கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவா்களின் கல்வியும், ஒழுக்கமும் பாதிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தகைய பழக்கத்தை தடுக்க, பெற்றோரும் ஆசிரியா்களும் குழந்தைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அவா்களது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால், பை, புத்தகங்கள் உள்ளிட்ட அவா்கள் பயன்படுத்தும் பொருள்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியா்களிடம் தங்களது குழந்தகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும். ஒரு பழக்கத்துக்கு அவா்கள் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து அவா்களை வெளிக்கொணருவது எளிதல்ல. அதை பெற்றோா் உணர வேண்டும். மேலும், இத்தகைய போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் நம் உறவுகளையும் நண்பா்களையும் மீட்டெடுக்க உதவ வேண்டும். இதுதொடா்பான உதவிக்கு மாவட்ட சமூகநல அலுவலரை தொடா்பு கொள்ளலாம். புகாா் தெரிவிக்க மாவட்ட கண்காணிப்பாளரின் சிறப்பு வாட்ஸ்ஆப் எண் 7010363173ஐ பயன்படுத்திக்கொள்ளலாம் அவா்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com