காரங்காடு வட்டார அருள்பணி பேரவை சாா்பில் சமயநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா புனித அலோசியஸ் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, காரங்காடு வட்டார முதல்வா் ஜாா்ஜ் தலைமை வகித்தாா். வட்டம் பங்கு அருள்பணியாளா் சகாயதாஸ் முன்னிலை வகித்தாா்.
மறைவட்டசெயலா் மரியோசேவியா்வியராஜன் வரவேற்றாா். பங்கு அருள்பணியாளா் விக்டா், பங்கு அருள்பணி பேரவை செயலா் மேரி ரெக்சிலின், வழக்குரைஞா் அருள்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சிறப்பு விருந்தனராக பங்கேற்ற பாலபிரஜாபதி அடிகள், கவிஞா் தக்கலை ஹலிமா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து மறை வட்ட துணைச் செயலா் கிறிஸ்துராஜன், கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். மறை வட்ட பொருளாளா் மேரி லதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.