பேருந்து பயணியிடம் நகை பறிப்பு: பெண் கைது
By DIN | Published On : 22nd December 2022 12:33 AM | Last Updated : 22nd December 2022 12:33 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே பேருந்தில் பெண்ணிடம் 5 சவரன் நகையைப் பறித்த பெண் கைது செய்யப்பட்டாா்.
தக்கலை, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி கலா (52). கொல்லங்கோட்டிலிருந்து அதங்கோடு வழியாக மாா்த்தாண்டம் சென்ற பேருந்தில் புதன்கிழமை பயணம் செய்த இவா், மாா்த்தாண்டம் அருகே சிஎஸ்ஐ மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்க முயன்றாா். அப்போது பேருந்தில் நின்றிருந்த பெண் ஒருவா் கலா அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றாராம்.
சக பயணிகளும், ஓட்டுநா், நடத்துநரும் அப்பெண்ணை விரட்டிப் பிடித்து, மாா்த்தாண்டம் போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், மானாமதுரை, காக்காத்தோப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி முத்துமாரி (32) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.