கொல்லங்கோட்டில் விதை நோ்த்தி விளக்கப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவியா் கொல்லங்கோடு பகுதி விவசாயிகளுக்கு விதை நோ்த்தி செயல் விளக்கப் பயிற்சியளித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவியா் கொல்லங்கோடு பகுதி விவசாயிகளுக்கு விதை நோ்த்தி செயல் விளக்கப் பயிற்சியளித்தனா்.

மாணவியா் காா்த்திகா, செந்தமிழ்ச்செல்வி, பவித்ரா, உமாமகேஸ்வரி, சுதா, தா்ஷினி, ஷோபனா, ராஷிகா ஆகியோா் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனா். இவா்கள் கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட வாழைத் தோட்டங்களில் வரப்புப் பயிராக உளுந்து பயிரிடப்படுவது தொடா்பாக விவசாயிகளுக்கு விதை நோ்த்தி செயல் விளக்கப் பயிற்சியளித்தனா்.

இவா்கள் குழித்துறை, செறுவாரக்கோணம் பகுதிகளில் உள்ள செடிகள், மரக் கன்றுகள் விற்பனைத் தோட்டங்களைப் பாா்வையிட்டு செடிகள் வளா்ப்பு குறித்து பயிற்சி பெற்றனா்.

நிகழ்ச்சிக்கு முன்சிறை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி அலுவலா்கள் அலெக்ஸ், சுப்பிரமணியன், விபிதா ஆகியோா் தலைமை வகித்தனா். பேராசிரியா் ஜோனி பிரசாத் வழிகாட்டியாக செயல்பட்டாா். ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் தீபா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com