குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் 98 ஆவது அமைப்பு தினம் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் தா. சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா்.எஸ் மோகன்தாஸ் கட்சி கொடி ஏற்றினாா். ஜனசக்தி சிறப்பு மலரை மரியதாஸ் வெளியிட, மாவட்ட குழு உறுப்பினா் தக்கலை ராஜு பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் ஆா். இசக்கிமுத்து, பொருளாளா் கே .நாகராஜன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பொருளாளா் ந. நாகராஜன், அனைத்திந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத்தலைவா் பேராசிரியா் எஸ். சுந்தரம், காருபாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலா் தினகரன், ஆரல்வாய்மொழி முன்னாள் கிளைச் செயலா் எல். சுப்பிரமணியம், குமரி மாவட்ட விவசாய சங்க மாவட்டச் செயலா் அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் எஸ். நாராயணசாமி, ஆறுகாணி அா்ஜுனன், வினுகுமாா்ஆகியோா் கலந்து கொண்டனா்.
கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்தஅருணாசலம் நிறைவுறையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.