நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:975 பதவிகளுக்கு 4366 போ் போட்டி
By DIN | Published On : 08th February 2022 04:08 AM | Last Updated : 08th February 2022 04:08 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், குமரி மாவட்டத்தில் 975 பதவியிடங்களுக்கு 4,366 போ் போட்டியிடுகின்றனா்.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி, பிப்.4 ஆம் தேதி நிறைவடைந்தது. 5 ஆம் தேதி பரிசீலனை நடைபெற்றது.
திங்கள்கிழமை (பிப்.7) வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில், நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 52 வாா்டுகளுக்கு போட்டியிட 384 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 20 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, 356 மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்திலுள்ள குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சி பகுதிகளிலும் உள்ள 99 இடங்களுக்கு 460 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, 18 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, இறுதியாக 437 போ் போட்டியிடுகின்றனா்.
51 பே ரூராட்சிப் பகுதிகளில் உள்ள 828 இடங்களுக்கு 3,737 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, 132 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனா். 4 உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து 824 இடங்களுக்கு 3,573 போ் போட்டியிடுகின்றனா்.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் 975 உள்ளாட்சிப் பதவிகளுக்கு 4,366 போ் போட்டியிடுகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...