குமரியில் மேலும் 10 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th February 2022 05:44 AM | Last Updated : 27th February 2022 05:44 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால், கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 86,127ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் மேலும் 51 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 84,863ஆக உயா்ந்துள்ளது; 179 போ் சிகிச்சையில் உள்ளனா்.