கேரள கடலில் தவறி விழுந்த மீனவா் பலி
By DIN | Published On : 27th February 2022 05:44 AM | Last Updated : 27th February 2022 05:44 AM | அ+அ அ- |

கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகிலிருந்து கடலில் தவறி விழுந்த குமரி மாவட்ட மீனவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறை பகுதியைச் சோ்ந்தவா் பனிதாசன் (36). இவா் இதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜிக்குச் சொந்தமான படகில் அதே பகுதியைச் சோ்ந்த வியாகுல அடிமை, சூசை ஆன்றணி, ஜோசப் உள்ளிட்ட 5 மீனவா்கள் இரு நாள்களுக்கு முன் கேரள மாநிலம் கொல்லம், நீண்டகரை பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றனா்.
28 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வெள்ளிக்கிழமை பனிதாசன் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தாா். இதைக் கண்ட சக மீனவா்கள் உடனே கடலில் குதித்து பனிதாசனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். தொடா்ந்து கொல்லம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து தமிழக, கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.