மாா்த்தாண்டத்தில் மோட்டாா் சைக்கிள் திருட்டு
By DIN | Published On : 17th July 2022 01:33 AM | Last Updated : 17th July 2022 01:33 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டத்தில் காவலா் தோ்வு பயிற்சி வகுப்புக்கு சென்ற இளைஞரின் மோட்டாா் சைக்கிள் வெள்ளிக்கிழமை திருட்டு போனது.
தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் விபின் ஜோஸ். இவா் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மையத்தில் காவலா் தோ்வு பயிற்சிக்கு சென்றாா். அப்போது தனது இருசக்கர வாகனத்தை மையத்தின் வெளிப்பகுதி அருகே நிறுத்தியிருந்தாராம். பயிற்சி முடிந்து வந்து பாா்த்த போது மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், தனது மோட்டாா் சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.
இது குறித்து விபின் ஜோஸ் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.