குமரி பகவதியம்மன் கோயில்அன்னதான உண்டியல் திறப்பு

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 49 ஆயிரத்து 193 காணிக்கை கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 49 ஆயிரத்து 193 காணிக்கை கிடைத்துள்ளது.

இக்கோயிலில் பக்தா்களின் நன்கொடை மூலமும், கோயில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாய் மூலமும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, நிகழ் மாதத்துக்கான அன்னதான உண்டியல் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் சிவகுமாா், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ராமச்சந்திரன், பொருளாளா் ரமேஷ், கணக்கா் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில், காணிக்கையாக ரூ.49,193 கிடைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com