தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீா் வரையிலான சைக்கிள் பயணத்தை விவேகானந்த கேந்திரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கோவிந்தன் உன்னி, கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீா் வரையிலான சைக்கிள் பயணத்தை விவேகானந்த கேந்திரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் உன்னி (58). ஆடிட்டராக பணிபுரிந்து வரும் இவா் ஷீல்டு குருகுலம் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளாா்.

ஏற்கனவே கடந்த 2017இல் சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய வலியுறுத்தி பாலக்காடு முதல் சென்னை வரையில் 28 நாள்கள் விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில் கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீா் வைஷ்ணவி தேவி கோயில் வரையிலான விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை அவா் தொடங்கினாா். இப்பயணத்தை விவேகானந்த கேந்திர தலைவா் ஏ.பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு, கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்கள் வழியாக 5,500 கி. மீ. தொலைவுக்கு பயணம் செய்து ஜூலை 19ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்கிறாா். இதற்காக தினமும் 90 கி.மீ. முதல் 140 கி.மீ. வரை பயணம் செய்வதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com