குமரி அறிவியல் பேரவை சாா்பில் 40 பேருக்கு இளம் விஞ்ஞானி விருது
By DIN | Published On : 10th June 2022 01:42 AM | Last Updated : 10th June 2022 01:42 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே, குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவா்கள் 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த அமைப்பு சாா்பில் இணையவழியில் 55 மாணவா்களும், நேரிடையாக 40 மாணவா்களும் இளம் விஞ்ஞானி பயிற்சி பெற்று வந்தனா். இதில், நேரடிப் பயிற்சி பெற்றவா்கள் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் ‘வாழ்வியல் நிலைத்தன்மை’ என்னும் பொருளில் ஆய்வறிக்கை சமா்ப்பித்தனா்.
இவா்களுக்கு விருது வழங்கும் விழா மாா்த்தாண்டம் அருகே மூடோடில் உள்ள சிக்மா ஆா்க்கிடெக்சா் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரித் தலைவா் ஜேம்ஸ் வில்சன் தலைமை வகித்தாா்.
குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினாா். திருவனந்தபுரம் கோளரங்க முன்னாள் இயக்குநா் அருள்ஜெரால்டு பிரகாஷ் விழாவைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத் தலைவா் விஜயகுமாா் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்தாா்.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாண்ரபிகுமாா், பாலகிருஷ்ணன், கோபாலன், சுனில்குமாா், ஜாண்சன், எட்வின்சாம், சஜிவ், ஹெலன்சோனியா, தீபா, தன்யாசுனில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...