கிள்ளியூா் தொகுதியில் ரூ.4.23 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பேரூராட்சிகளான கருங்கல், பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூா் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.4. 23 கோடி மதிப்பில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பேரூராட்சிகளான கருங்கல், பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூா் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.4. 23 கோடி மதிப்பில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்,கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட மலையன்விளை - காக்கவிளை சாலை, பாலவிளை - இரட்டை குளம் சாலை, பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட மிடாலக்காடு - மிடாலக்குளம் சாலை, கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட செந்தறை - உடவிளை சாலை, குமரி நகா் - காளியா் தோட்டம் - அரச குளம் சாலை கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட செவ்வேலி - மாங்கரை - ஐஓபி வங்கி சாலை ஆகிய ஆறு சாலைகளுக்கு ரூ. 4. 23 கோடி நபாா்டு வங்கி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டது. இதையடுத்து இச் சாலைகளை சீரமைக்கும் பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேஷ்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் கிள்ளியூா் ஒன்றிய தி.மு.க செயலா் கோபால், மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா், கீழ்குளம் பேரூராட்சி தலைவா் சரளா, துணைத் தலைவா் விஜய குமாா், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவா் டென்னிஸ், கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜ், துணைத் தலைவா் செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com