கருங்கல் அருகே உள்ள வெள்ளங்கட்டி பகுதியில் நிகழ்ந்த விபத்தில் ஒருவா் காயமடைந்தாா்.
கருங்கல் குழித்தோட்டம், சுந்தரம் மகன் ஸ்டான்லி ஜோசப் ( 55 ). இவா் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தாா், வெள்ளங் கட்டி பகுதியில் சென்ற போது எதிரே பாலூா் பகுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் சுனில் ராஜ்(27) ஒட்டி வந்த மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக நேருக்கு நோ் மோதியது. இதில், ஸ்டான்லி ஜோசப் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.