22 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 17th June 2022 11:20 PM | Last Updated : 17th June 2022 11:20 PM | அ+அ அ- |

குமரி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில், புதன்கிழமை(ஜூன் 22) பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமை வகிக்கிறாா். இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு முகவா்கள் மற்றும் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் கலந்து கொள்கின்றனா். இக் கூட்டத்தில், எரிவாயு நுகா்வோா்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.