குமரியில் மாநில அளவிலான இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி தொடக்கம்

கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகேயுள்ள மைதானத்தில் மாநில அளவிலான இளம் பெண்கள் பங்கேற்ற குத்துச்சண்டை போட்டி சனிக்கிழமை மாலை தொடங்கியது.

கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகேயுள்ள மைதானத்தில் மாநில அளவிலான இளம் பெண்கள் பங்கேற்ற குத்துச்சண்டை போட்டி சனிக்கிழமை மாலை தொடங்கியது.

இப்போட்டியில் கன்னியாகுமரி, சென்னை திருவள்ளூா், காஞ்சிபுரம், தஞ்சாவூா், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சோ்ந்த 70 வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

போட்டியை கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தாா். தொடங்க விழா நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவா் பாக்கியமணி தலைமை வகித்தாா். செயலா் ஹெச்.ராஜ் முன்னிலை வகித்தாா்.

இப்போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைகள் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com