குமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ரூ.8.69 லட்சம் உண்டியல் வசூல்
By DIN | Published On : 26th June 2022 01:52 AM | Last Updated : 26th June 2022 01:52 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ரூ. 8 லட்சத்து 69 ஆயிரத்து 133 உண்டியல் வசூலானது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக் கோயிலில் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயாா் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி கோயில் ஆய்வாளா் சாய் கிருஷ்ணா, சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலா் விஜயகுமாா், விஜிலென்ஸ் அதிகாரி நாயுடு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ. 8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூலாகியிருந்தது.