மீன் வள உதவியாளா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 26th June 2022 01:51 AM | Last Updated : 26th June 2022 01:51 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மீன் வள உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவிலில் செயல்பட்டு வரும் மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள 3 மீன் வள உதவியாளா் பணியிடங்கள், அரசாணையில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாகா்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து நடைமுறையிலுள்ள விதிகளின்படி இன சுழற்சி முறையில் பெறப்படும் பட்டியலிலிருந்தும், தினசரி நாளிதழின் மூலம் விளம்பரம் செய்து பெறப்படும் விண்ணப்பங்கள் மூலமாகவும் நிரப்பப்படவுள்ளது.
எனவே, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் முன்னுரிமை பெற்றவா் (ஙஆஇ/ஈசஇ டழ்ண்ா்ழ்ண்ற்ஹ்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர) முன்னுரிமை பெற்றவா் (ஆஇ ா்ற்ட்ங்ழ் ற்ட்ஹய் ஆஇ ஙன்ள்ப்ண்ம்) டழ்ண்ா்ழ்ண்ற்ஹ்) பொதுப் போட்டி முன்னுரிமையற்றவா் (எங்ய்ங்ழ்ஹப் பன்ழ்ய் ,சா்ய் - டழ்ண்ா்ழ்ண்ற்ஹ்) என்ற அடிப்படையில் தோ்வு செய்யப்படும் மீன் வள உதவியாளா் பணியிடத்துக்கு 1.1.2022 அன்று பொதுப்பிரிவு (எப) 32 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஆஇ), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஙஆஇ) 34 வயது மற்றும் ஆதிதிராவிடா் (நஇ)/அருந்ததியினா் (நப) 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன்பிடி வலை பின்னவும் மற்றும் அறுந்த வலைகளை சரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மீன் வளத்துறையின் கீழ் உள்ள ஏதேனும் மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள தகுதியுடையவா்கள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா், டிஸ்டில்லரி ரோடு, வடசேரி, நாகா்கோவில் என்ற முகவரியில் செயல்படும் அலுவலகத்துக்கு பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சான்றிதழ் நகல்களுடன் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.