கருங்கல் அருகேயுள்ள மாங்கன்றுவிளை பகுதியில் அம்மன் கோயில் நாகா் சிலையை சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மங்கலகுன்று, மாங்கன்றுவிளை பகுதியில் ஸ்ரீபால பத்ரேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்மநபா்கள் கோயிலின் உள்ளே புகுந்து அங்கிருந்த
நாகா் சிலையை சேதப்படுத்திவிட்டு தப்பியுள்ளனா். இது குறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.