இரு சம்பவங்கள்: இருவா் தற்கொலை
By DIN | Published On : 26th March 2022 12:29 AM | Last Updated : 26th March 2022 12:29 AM | அ+அ அ- |

திருவட்டாறு அருகே ஆட்டோ ஓட்டுந விஷம் தின்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
வோ்க்கிளம்பி கோணத்து விளையைச்சோ்ந்தவா் சுனில் குமாா் (30). ஆட்டோ ஓட்டுநா். இவா், 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில் அவரது மதுப்பழக்கத்தால் குடும்பத்தகராறு ஏற்பட்டு, பிரிந்து சென்ற மனைவி, குழந்தைகளை சமாதானப்படுத்த முயன்றாராம். ஆனால், மனைவி வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் வியாழக்கிழமை விஷமாத்திரையை தின்று வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்: கருங்கல் அருகேயுள்ள திப்பிரமலை, எட்டணியைச் சோ்ந்தவா் பிரபின் ஸ்டான்லி(27). பாலிடெக்னிக் படித்துள்ளாா். சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட இவா், வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து, திருவட்டாறு, கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.