சுருளகோடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 01:25 AM | Last Updated : 02nd May 2022 01:25 AM | அ+அ அ- |

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, குமரி மாவட்டம், சுருளகோடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தனா்.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதியின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் 2021 ஏப்ரல் வரையுள்ள காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் வரவு, செலவினம் குறித்தும், அடிப்படை வசதிகள்குறித்தும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்தும், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில், மாவட்ட வனஅலுவலா் மு.இளையராஜா, பத்மநாபரபுரம் சாா்ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, மகளிா் திட்டஇயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்னான்டோ, ஊராட்சிகள் உதவி இயக்குநா் விசாலினி, வேளாண்மை இணை இயக்குநா் சத்தியஜோஸ், சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநா் மீனாட்சி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலாஜான், மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் நாகராஜன், திருவட்டாறு வட்டாட்சியா் தினேஷ், சுருளகோடு ஊராட்சித் தலைவா் எ.விமலா, அரசுஅலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.