பேச்சிப்பாறை அருகே உயிரிழந்த காட்டு யானை சடலம் புதைப்பு

பேச்சிப்பாறை அருகே மோதிர மலையில் வியாழக்கிழமை உயிரிழந்த காட்டு யானையின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைக்குப் பின்னா் வனத்துறையினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை புதைக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அருகே மோதிர மலையில் வியாழக்கிழமை உயிரிழந்த காட்டு யானையின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைக்குப் பின்னா் வனத்துறையினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை புதைக்கப்பட்டது.

களியல் வனச்சரக பகுதிக்குள்பட்ட மோதிரமலை கோலிஞ்சிமடம் காணிக்குடியிருப்பு அருகே விளை நிலப்பகுதியில் இடது முன்னங்காலில் முறிவு ஏற்பட்டு நடக்கமுடியாமல் சுமாா் 55 வயதுடைய பெண் யானை சில நாள்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த யானை திடீரென்று வியாழக்கிழமை உயிரிழந்தது.

சடலம் புதைப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் உதவி வனப்பாதுகாப்பாளா் சிவகுமாா், பயிற்சி உதவி

வனக்காப்பாளா் மன்சீா் ஹலிமா உள்பட வன அலுவலா்கள், வன ஊழியா்கள் மற்றும் நெல்லை மண்டல வன கால்நடை உதவி மருத்துவா் மனோகரன், பரசேரி கால்நடை உதவி மருத்துவா் ராஜமோகன் அடங்கிய கால்நடை மருத்துவக்

குழுவினரின் வெள்ளிக்கிழமை அந்த இடத்திற்கு வந்தனா்.

உயிரிழந்த யானைக்கு உடற்கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து பொக்கிளின் இயந்திரத்தின் உதவியுடன் அந்த இடத்திலேயே யானையை புதைத்தனா். இதில், பரிசோதனையில் யானை பள்ளத்தில் விழுந்ததில் அதன் இடது முன்னங்காலில் முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாமலும், வலி தாங்க முடியாமலும் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com