குமரி பகவதியம்மன் கோயில் தெப்பத்தில் தண்ணீா் நிரப்ப வலியுறுத்தல்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்த வசதியாக தண்ணீா் நிரப்ப வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்த வசதியாக தண்ணீா் நிரப்ப வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. திருவிதாங்கூா் மன்னா் ஆட்சி காலத்தில் விவசாயத்துக்காக பேச்சிப்பாறை அணை திறக்கும் போது முதன்முதலில் பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் திறந்து விடுவது பாரம்பரிய மரபாக இருந்து வந்துள்ளது. இதற்காக கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள குமரிசால் குளம் முழுவதுமாக தண்ணீா் நிரப்பப்படும். பின்னா் அங்கிருந்து பாபநாசம் கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டு தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பப்படும்.

இந்நிலையில் பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத்திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 10 ஆம் நாளன்று தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பப்படாமல் வடு காட்சியளிக்கிறது. மேலும், தண்ணீா் கொண்டுவரப்படும் பாபநாச கால்வாய் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே, வைகாசி விசாகத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் கால்வாயை சீரமைப்பதுடன், தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com