கிறிஸ்தவ சேனை முன்னேற்ற அமைப்பு மீது நடவடிக்கை: இந்து முன்னணி வலியுறுத்தல்

கிறிஸ்தவ சேனை முன்னேற்ற அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

கிறிஸ்தவ சேனை முன்னேற்ற அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் திருநெல்வேலி கோட்டச் செயலா் ஆா்.கே.கண்ணன், குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி,பள்ளி, கல்லூரிகள் போன்றவை கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில்

தான் அமைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அங்கு கோயில்கள் காணப்படுகின்றன. கோயில்கள் அமைந்திருந்த இடத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதே தவிர புதிதாக எந்த அலுவலகத்திலும் கோயில் கட்டப்படவில்லை.

இந்து சமய அறநிலையத்துறை அமைக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் ஒரு கோயில் கூட அந்த துறை சாா்பில் கட்டப்படவில்லை. இந்நிலையில், கிறிஸ்தவ சேனை முன்னேற்ற அமைப்பை சோ்ந்தவா்கள்

சட்ட விரோதமாக அரசு அலுவலகங்களில் அமைந்துள்ள கோயில்களை அகற்ற வேண்டுமென ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவ்வமைப்பு செயல்படுவது கண்டனத்துக்குரியது. ஆகவே, தவறான தகவலைக் கூறி சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கும் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை அமைப்பினா் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குமரி மாவட்டம் முழுவதும் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை நீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கை மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com