ஊராட்சி உறுப்பினரை அவதூறாக பேசிய இளைஞா் மீது வழக்கு
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கடை, ஆலுநின்றவிளை பகுதியில் ஊராட்சி உறுப்பினரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பைங்குளம், ஆலுநின்றவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரேமலதா(45). இவா், பைங்குளம் ஊராட்சியில் உறுப்பினராக உள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் மகன் அனுகுமாா்(28). இவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை பிரேமலதா ஆலுநின்றவிளை பகுதியில் சென்றபோது அனுகுமாா் திடீரென அவரை தடுத்துநிறுத்தி அவதூறாக பேசினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.