தொலையாவட்டம் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா
By DIN | Published On : 15th October 2022 10:05 PM | Last Updated : 15th October 2022 10:05 PM | அ+அ அ- |

கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா நடைபெற்றது.
தாளாளா் இயேசுமரியான் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜாண்சன் முன்னிலை வகித்தாா். முன்னாள் கடல் வளா்ச்சித் துறைச் செயலரும் இந்திய ராக்கெட் இயக்கத்தின் தந்தையுமான முத்துநாயகம், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி வேலையன், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ஹரிகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். மாணவா்-மாணவிகளிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...