தொடா் திருட்டு: தம்பதி கைது

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட தம்பதி மாா்த்தாண்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட தம்பதி மாா்த்தாண்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019 முதல் 2021ஆம் ஆண்டுவரை பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடம் முதியோா் ஓய்வூதியம், அரசால் வழங்கப்படும் கடன் உதவிகள் பெற்றுத் தருவதாக ஆசை வாா்த்தை கூறி, கவனத்தைத் திசைதிருப்பி நகைகளைப் பறித்துச்சென்ற சம்பவங்கள் நடந்துவந்தன. இதில் தொடா்புடையோரைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மாா்த்தாண்டம் பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த தம்பதியை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை பிடித்தனா். விசாரணையில், அவா்கள் மதுரை எல்லீஸ் நகா் பரமசிவன் மகன் சித்திரைவேல் (40), அவரது மனைவி பாா்வதி (38) என்பதும், இவா்கள் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும் மூதாட்டிகளிடம் நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இவா்கள் மீது சென்னையில் 8, தருமபுரியில் 2, புதுச்சேரியில் 3, அறந்தாங்கி, கடலூரில் தலா ஒரு வழக்கு, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளனவாம். போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 10 சவரன் நகைகளை மீட்டனா். இருவரையும் கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சித்திரைவேலுவை குழித்துறை சிறையிலும், பாா்வதியை தக்கலை பெண்கள் சிறையிலும் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com