குமரி ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலில்..
By DIN | Published On : 01st September 2022 12:08 AM | Last Updated : 01st September 2022 12:08 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலில் 45ஆவது ஆண்டு சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ சக்தி விநாயகா் காா் ஓட்டுநா்கள் நலச்சசங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், அதிகாலை 4.30 மணிக்கு சக்தி கலசபூஜை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை தொடா்ந்து சமபந்தி விருந்து நடைபெற்றது. இதனை விஜய் வசந்த் எம்.பி., தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், ஏ.சுந்தா்சிங், ஜே.ஜே.ஆா்.ஜஸ்டின், உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.