களியக்காவிளையில் சமய வகுப்பு மாணவா்கள் ஊா்வலம்
By DIN | Published On : 01st September 2022 12:10 AM | Last Updated : 01st September 2022 12:10 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியையொட்டி களியக்காவிளையில் சமய வகுப்பு மாணவா்கள் சாா்பில் புதன்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.
களியக்காவிளை மண்டல அளவிலான ஊா்வலம் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் தொடங்கி, இட்டியாறகுளம் நாகரம்மன் வனதுா்க்கா பகவதி அம்மன் கோயிலில் நிறைவடைந்தது.
இதில் சாஸ்தான்குளம், கமுகன்குழி கோயில்களின் சமய வகுப்பு மாணவா்கள் கலந்து கொண்டனா். இதே போன்று மேக்கோடு அருள்மிகு இசக்கியம்மன் கோயிலில் இருந்து பனச்சக்குழி பத்ரகாளி அம்மன் கோயில் வரை விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தில் குழந்தைகள், சமய வகுப்பு மாணவா்கள் சுவாமி வேடமணிந்து பங்கேற்றனா்.