கருக்குப்பனை - செல்லங்கோணம் சாலையை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 01st September 2022 12:14 AM | Last Updated : 01st September 2022 12:14 AM | அ+அ அ- |

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை -செல்லங்கோணம் குறுக்குச்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் சாலைகள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடிக்கடி பழுதாகி வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட கருக்குப்பனை -செல்லங்கோணம் சாலை மிகவும் பழுதடைந்து குண்டு, குழியுமாகி போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், முதியவா்கள், நோயாளிக்ள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.