குமரியில் நடைபாதை கடைகள் திடீா் அகற்றம்
By DIN | Published On : 05th September 2022 12:00 AM | Last Updated : 05th September 2022 12:00 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இருந்த நடைபாதை கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி எம்.பி. வரும் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்குகிறாா்.
இந்த நடைப்பயணத்தின் தொடக்க விழா 7ஆம் தேதி மாலை இங்குள்ள கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி மண்டபம் பஜாரில் நடைபாதையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டன.