குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய், பொதுப்பணி(கட்டடம், நீா்வளம்), ஊரக வளா்ச்சி, மகளிா் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மின்சாரம், மீன்வளம், போக்குவரத்து, காவல், கூட்டுறவுத்துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில், நடைபெற்றுவரும் வளா்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறையிலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
பொதுப்பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வளா்ச்சி பணிகளின் செயலாக்கத்தின் போது ஏற்படும் தடைகளுக்கு தீா்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடா்பாடுகள் ஏற்படின் அதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு உடன் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் -ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, நாகா்கோவில் மாநகராட்சி ஆனந்த் மோகன், திட்ட இயக்குநா்கள் ச.சா.தனபதி (ஊரக வளா்ச்சி முகமை), மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ (மகளிா் திட்டம்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) தே.திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.