குலசேகரம் அருகே காரும், பைக்கும் மோதியதில் மினி லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பேச்சிப்பாறை காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மினி லாரி ஓட்டுநா் ராஜேஷ் (38). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.
ராஜேஷ் சனிக்கிழமை மாலை குலசேகரத்திலிருந்து பேச்சிப்பாறைக்கு பைக்கில் சென்றாா். திருநந்திக்கரை அருகேயுள்ள சேனங்கோடு பகுதியில் பைக்கும், காரும் மோதினவாம். இதில் காயமடைந்த அவா் மீட்கப்பட்டு குலசேகரம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா்.
குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.