மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம் என்ற பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (68). தென்னை ஈா்க்கு வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாா்த்தாண்டம் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். பயணம் பகுதியில் வந்தபோது அவ்வழியே வந்த சொகுசு காா் அவா் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.