அம்பேத்கா் சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரியில் உள்ளஅவரது சிலைக்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரியில் உள்ளஅவரது சிலைக்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் முன்னிலையில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாநகர மாவட்டத்தலைவா் நவீன்குமாா் தலைமையில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பிரின்ஸ் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், அவைத்தலைவா் சேவியா் மனோகரன் ஆகியோா் மாலை அணிவித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாநிலக்குழு உறுப்பினா் அகமது உசேன் மாலை அணிவித்தாா். பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் தா்மராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ. உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா், மாவட்டச் செயலாளா்கள் மாத்தூா் ஜெயன், திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com