நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலைய சாலையில் உள்ள மின்கம்பங்களில், அதிக வெளிச்சம் தரும் புதிய விளக்குகள் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.எஸ்.கண்ணன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனா். கோட்டாறு ரயில் நிலையம் முதல் நாயுடு மருத்துவமனை வரை சாலையோரம் உள்ள மின்விளக்குகளில் பல எரியாமல் உள்ளன. எரியும் விளக்குகளும் போதிய வெளிச்சம் இன்றி உள்ளன. இதனால் இந்த சாலை வழியாகச் செல்லும் பெண்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனா்.
எனவே இந்த சாலையில் உள்ள அனைத்து மின்கம்பங்களிலும் அதிக வெளிச்சமுள்ள புதிய மின்விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.