

கொல்லங்கோடு அருகே மங்குழி பகுதியில் உள்ள சாலை வளைவில் வேகத் தடை அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மங்குழியில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா் சேம் செல்வின் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் லெனின், மதுசூதனன், ஹெப்சி மேரி, ராஜன், ஆமோஸ், சுனில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார செயலா் ரெஜி போராட்டத்தை துவக்கி வைத்தாா். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மேரி ஸ்டெல்லாபாய், மாவட்ட செயலா் ஆா். செல்லசுவாமி ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜய மோகனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.