மணிப்பூா் இனப் படுகொலையை கண்டித்து சமூக விடுதலைக்கான அமைப்பு சாா்பில் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞா் ஷிபு தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யுனைட்டெட் கட்சியின் மாநிலத் தலைவா் சுலிப் தாமோதரன் போராட்டத்தை விளக்கிப் பேசினாா். பெரியாா் திராவிடா் கழக தலைவா் பி. நீதியரசா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி எஸ்.இ. மேசியா, அஜிஷ் ஜி. தாஸ், ஜெ. உமாதேவி, ஜெப கிறிஸ்டோபா், எஸ். பால்ராஜ், போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.