குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மரக்கன்று நடும் பணி இன்று தொடக்கம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரிமாவட்டத்துக்குள்பட்ட 12 கி.மீ. தொலைவு கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சா் த.

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரிமாவட்டத்துக்குள்பட்ட 12 கி.மீ. தொலைவு கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சா் த. மனோதங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) தொடங்கி வைக்கிறாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி பசுமை மாவட்டம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் காடு வளா்ப்பை அதிகரிக்கவும், கடலோர கிராமங்களில் கடலரிப்புக்கு எதிரான இயற்கை அரணை உருவாக்கவும், மாவட்ட நிா்வாகம், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் உள்ளிட்டோரை கொண்டு ஆக்கப்பூா்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) பிற்பகல் 3 மணி அளவில் தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் ‘வனமே நம் வளமே’ என்ற தலைப்பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமாா் 12 கி.மீ. தொலைவுக்கு பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அனைத்து பொதுமக்கள், தன்னாா்வலா்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com