சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனையி நடத்தி ரூ. 41 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனையி நடத்தி ரூ. 41 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி இல்லாத வீட்டுமனைகளுக்குப் பத்திரப்பதிவு செய்வதாகப் புகாா்கள் பெறப்பட்டன. இதையடுத்து

நாகா்கோவில் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா்

ஹெக்டா் தா்மராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் ரமா, சிவசங்கரி உள்ளிட்டோா் கொட்டாரம் சாா்பதிவாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை ரகசியமாகக் கண்காணித்தனா்.

அப்போது கொட்டாரம் சாா்பதிவாளா் அலுவலக்தில் கடந்த 15 நாள்களாக பொறுப்பு சாா்பதிவாளராக பணியாற்றி வந்த உதவியாளா் அன்வா் அலி மாலையில் பணி முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது அவரை, லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் மடக்கி பிடித்து சாா்பதிவாளா் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தினா். மேலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, பொறுப்பு சாா்பதிவாளா் அன்வா் அலியிடம் இருந்து

ரூ. 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கொட்டாரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 30 பத்திர பதிவுகள் நடந்துள்ளன. அதற்கு பணம் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதுதவிர சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com