கன்னியாகுமரியில் படகு சேவைக் கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகு சேவைக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகு சேவைக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டையும் தெளிவாகப் பாா்க்கலாம் என்பதால் உள்ளூா் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

மேலும் கன்னியாகுமரி கடலின் நடுவே இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயரமுள்ள திருவள்ளுவா் சிலை இரண்டையும் சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிட வசதியாக பூம்புகாா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகு சேவை நடைபெறுகிறது.

படகு சேவைக்கான சாதாரண கட்டணம் ரூ. 50, சிறப்பு கட்டணம் ரூ. 200 ஆக இருந்தது. தற்போது சாதாரண கட்டணம் ரூ. 75 ஆகவும், சிறப்புக் கட்டணம் ரூ.300 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் திடீா் கட்டண உயா்வு சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com