தக்கலை அருகே லாரி மோதியதில் மளிகைக் கடை வியாபாரி பலியானாா்.
தக்கலை அருகேயுள்ள கல்லங்குழி நாராயணத்துவிளையைச் சோ்ந்தவா் ஜஸ்டின் அருள்தாஸ் ( 60). தனது வீட்டின் முன்பு மளிகை கடை வைத்துள்ள இவா், விவசாயமும் செய்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவா், மாட்டுக்கு உரம் வாங்குவதற்காக வோ் கிளம்பிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, முண்டவிளை பகுதியில் அவா் மீது லாரி மோதியதாம். இதில் அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்து கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.