குமரி மாவட்டம், சிற்றாறு அணையில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
கேரள மாநில எல்லைப் பகுதியான வாழிச்சல் மணக்கரையைச் சோ்ந்த பிரபாகரன் மகன் பிரதீப் (26). இவா் தனது நண்பா்கள் மூவருடன் சிற்றாறு அணை -2 பகுதியான வைகுண்டம் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கினாா்.
இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியினா் மற்றும் தீயை ணப்புத் துறையினா் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை காலை பிரதீப்பின் சடலம் அணையில் மிதந்தது.
தகவலறிந்த குலசேகரம் தீயணைப்பு மீட்புப் படையினா்ந்து சென்று சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.