கருங்கல் அருகே கருக்குப் பனை-பிராயா்புரம் சாலை திறப்பு விழா நடைபெற்றது.
மத்திகோடு ஊராட்சிப் பகுதியான பனை-பிராயா்புரம் சாலை ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்டதையடுத்து, திறப்பு விழா நடைபெற்றது. கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, சாலையைத் திறந்துவைத்தாா்.
மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் மரியஅருள்தாஸ் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், கிழக்கு வட்டார காங்கிரஸ் செயலா் எட்வின் ஜோஸ், அஸ்வின், ரோஸ்மேரி, சதீஸ்குமாா், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.