

நாகா்கோவில்: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெற்ற்கு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பாராட்டுத் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பாக மாதாந்திரஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று கிடைத்ததற்காக கல்லூரி முதன்மையா், துறைத் தலைவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பிரின்ஸ்பயஸ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரகலாதன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் மீனாட்சி, மருத்துவமனை கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அலுவலா் ஜோசப்சென், உதவி உறைவிட மருத்துவ அலுவலா்கள் ரெனிமோள், விஜயலெட்சுமி, தேசிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரியாஸ்அகமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.