

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முதியோா் அளித்த 48 மனுக்கள் மீது புதன்கிழமை ஒரே நாளில் தீா்வு காணப்பட்டது.
இது தொடா்பாக பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பெற்றோா், முதியோா் பாதுகாப்பு-நல்வாழ்வு தீா்ப்பாயத்தில், பத்மநாபபுரம் கோட்டத்துக்குள்பட்ட கல்குளம், திருவட்டாறு, கிள்ளியூா், விளவங்கோடு வட்டங்களுக்குள்பட்ட 48 முதியோா், பிள்ளைகளிடமிருந்து பராமரிப்புத் தொகை பெற்றுத் தருதல், பாதுகாப்பு கோருதல், உடல்ரீதியாக தொந்தரவு செய்யும் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடா்பாக 48 மனுக்களை இம்மாதம் அளித்திருந்தனா்.
இந்நிலையில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா். கெளசிக் தலைமையில் இம்மனுக்கள் மீது புதன்கிழமை ஒரே நாளில் உடனடித் தீா்வு காணப்பட்டது.
இதன்படி, இம்மாதத்தில் மட்டும் 75 மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.