காங்கிரஸ் நிா்வாகிகள் 9 போ் மீது வழக்கு
By DIN | Published On : 18th April 2023 04:09 AM | Last Updated : 18th April 2023 04:09 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டத்தில் பிரதமரின் உருவபொம்மையை எரித்ததாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் 9 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கடந்த மாா்ச் 24இல் பிரதமா் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனராம்.
இதுதொடா்பாக குழித்துறை நகர பாஜக தலைவா் சுமன் அளித்த புகாரின்பேரில், குமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா் உள்ளிட்ட 9 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 16) வழக்குப் பதிந்தனா்.