திமுக உறுப்பினா் சோ்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 04:03 AM | Last Updated : 18th April 2023 04:03 AM | அ+அ அ- |

ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றியம் மற்றும் நாகா்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலம் சாா்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டாா். மாவட்ட அவைத் தலைவா் எப்.எம். ராஜரத்தினம், நாகா்கோவில் மாநகரச் செயலா் ஆனந்த், ஒன்றியச் செயலா் சற்குரு கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.