பலாத்காரம் செய்து பெண் கொலை: குண்டா் சட்டத்தில் பொறியாளா் கைது
By DIN | Published On : 23rd April 2023 01:51 AM | Last Updated : 23rd April 2023 01:51 AM | அ+அ அ- |

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், பொறியாளா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருவட்டாறு அருகேயுள்ள மூவாற்றுமுகம் பகுதியை சோ்ந்தவா் பொறியாளா் எட்வின் (28). இப் பகுதியைச் சோ்ந்த பெண்ணை,
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டாா்.
இவரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா். இதன்பேரில், எட்வினை குண்டா் சட்டத்தில் கைது செய்ய சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து எட்வினை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.