களியக்காவிளை அருகேஆம்புலன்ஸ் ஓட்டுநா் தற்கொலை
By DIN | Published On : 23rd April 2023 01:54 AM | Last Updated : 23rd April 2023 01:54 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே, கேரளத்தைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கேரள மாநிலம், பாறசாலை அருகே முக்கோலக்கல்வீட்டைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் அலன் (25). ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவா், களியக்காவிளை அருகே அன்னிக்கரை பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.
இவா் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதாா்த்தம் நடந்ததாகவும், இதனால் இவா் சில நாள்களாக வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை மாலை (ஏப். 21) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சனிக்கிழமை கூறாய்வு முடிந்த நிலையில், அலனின் சடலத்தை தனியாா் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்வதாக உறவினா்கள் தெரிவித்தனா். ஆனால், அரசு ஆம்புலன்ஸிலேயே கொண்டுசெல்ல வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், இரு தரப்பினரிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அவரது சடலம் அரசு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது.